எம்.பி சீட் கேட்டு வந்த தலைவர்கள்… சாட்டையை சுழற்றிய எடப்பாடி! – அதிர்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள்

எம்.பி சீட் கேட்டு வந்த தலைவர்கள்… சாட்டையை சுழற்றிய எடப்பாடி! – அதிர்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள்

மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு சீட் என்று அ.தி.மு.க இதுவரை அறிவிக்கவில்லை. சீட் ஒதுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் முதல் தோழமைக் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நெருக்கி வருகின்றனர்.

மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும் என்று தன்னை சந்தித்த நிர்வாகிகளிடம் கோஷ்டி மோதல் முதல் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி சாட்டையை சுழற்றியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு சீட் என்று அ.தி.மு.க இதுவரை அறிவிக்கவில்லை. சீட் ஒதுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் முதல் தோழமைக் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நெருக்கி வருகின்றனர்.

mps

இந்த நிலையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு தஞ்சை மாவட்டத்தில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்க திருச்சி வந்த முதல்வர் பழனிசாமியை பல மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது ஜெயலலிதா பாணியில் அவர் சாட்டையை சுழற்றியதால் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆடிப்போனதாக செய்திகள் கூறுகின்றன.
சீட் கேட்டு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலு எடப்பாடியிடம் பேசியுள்ளார். அப்போது அவர், “முதலில் கட்சியை வளர்க்கப் பாருங்கள். போன மாதம் தஞ்சாவூர் சென்றபோது நீங்கள் ஒரு கோஷ்டியாகவும் வெல்லமண்டி நடராஜன் ஒரு கோஷ்டியாகவும் எனக்கு வரவேற்பு கொடுத்தீர்கள். இப்படி பிரித்துக்கொண்டு நின்றால் மக்கள் எப்படி நம்மைப் பார்ப்பார்கள். ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? நம்பிக்கை இல்லையா? எம்.பி-சீட் தான் வேணும்னு அடம்பிடிக்கிறீங்க…” என்று பிடி பிடி என்று பிடித்தாராம்.

sivapathi

அடுத்து முன்னாள் அமைச்சர் சிவபதி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சீட் கேட்டுள்ளார். அப்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதி உங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதை சரியா பயன்படுத்திக்கொள்ளாமல் இப்போது மாநிலங்களவை சீட் வேணும்னு கேட்கிறீங்க. இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்காதவங்களை எப்படி சமாதானப்படுத்துவது. சீட் கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. யாருக்கு என்பதை தலைமைதான் முடிவு செய்யும்” என்றாராம். மேலும் சிவபதியிடம், “ஒற்றுமையாக வேலை செய்யாவிட்டால் திருச்சியில் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும்” என்று சொல்லி எச்சரித்து அனுப்பினாராம். எடப்பாடியின் இந்த அதிரடியைக் கண்டு அ.தி.மு.க பெருந்தலைகள் எல்லாம் ஆடிப்போய் உள்ளார்களாம்!