எம்.ஜி.ஆர்-க்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததா? – பழ நெடுமாறன் மறுப்பு 

எம்.ஜி.ஆர்-க்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததா? – பழ நெடுமாறன் மறுப்பு 

பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தமிழக சட்டப்பேரவையில் செம்மலை கூறியது தவறானது என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அவர் வழி தவறி சென்றதால் அவர் மீதான அனுதாபம் குறைந்தது என்று குறிப்பிட்டார்.

பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தமிழக சட்டப்பேரவையில் செம்மலை கூறியது தவறானது என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

nedumaran

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அவர் வழி தவறி சென்றதால் அவர் மீதான அனுதாபம் குறைந்தது என்று குறிப்பிட்டார்.

semmazhai

இதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, இந்திய ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் நானும் அமெரிக்காவிலிருந்த எம்.ஜி.ஆர்-க்கு இது தொடர்பான அவசர செய்தியை அனுப்பி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தினோம்.

mgr

இந்திய ராணுவம்தான் தமிழர்களைக் கொல்கிறது, நீங்கள் இதில் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். அதன் அடிப்படையிலேயே அப்போது அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ராஜிவ் காந்தியை எம்.ஜி.ஆர் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தினார்.

prabhakar

எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை விடுதலைப் புலிகளுக்கு உதவினார். ஒருபோதும் உதவிகளை அவர் நிறுத்தியது இல்லை. பிரபாகரன் வழி தவறிச் சென்றார் என்று செம்மலை கூறியுள்ளார். இது தவறானது. பிரபாகரன் ஒருபோதும் வழி தவறி செல்லவில்லை. ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர நாடு அமைக்க வேண்டும் என்பதில் கடைசி வரை அவர் உறுதியாக நின்றார். செம்மலைக்கு உண்மை நிலை தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.