எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுக-வுக்கு இழப்பு: திவாகரன்

 

எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுக-வுக்கு இழப்பு: திவாகரன்

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுக-வுக்கு தான் இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்

மன்னார்குடி: 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுக-வுக்கு தான் இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கல் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பு சாதகமாக வெளியாகியுள்ளதால், அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தீர்ப்பு குறித்து ஜெயலலிதா ஆட்சி நடந்து வரும் வேளையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

அதேசமயம், உயர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை அனுபவம் என கூறியுள்ள டிடிவி தினகரன், 18 எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுக-வுக்கு தான் இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தினகரனுக்கும் சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத்  தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதையடுத்து, அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கி திவாகரன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.