என் மீது 7 அவதூறு வழக்குள் போடப்பட்டுள்ளன: மு.க.ஸ்டாலின்

 

என் மீது 7 அவதூறு வழக்குள் போடப்பட்டுள்ளன: மு.க.ஸ்டாலின்

என் மீது அதிமுகவால் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: என் மீது அதிமுகவால் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான அவதூறு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோரும் வந்தனர். 

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீதும் என் குடும்பம் மீதும் அவதூறு வழக்கு போட்டார். அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பேசியதால் என் மீது அவர் அவதூறு வழக்கு தொடுத்தார். அடுத்ததாக ஜெயலலிதா கோட்டையில் இருப்பதைவிட கொடநாட்டில்தான் அதிகம் இருக்கிறார் என பேசியதற்கும் என் மீது அவதூறு வழக்கு போட்டார். இதுபோல் என் மீது 7 அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் மேல் சிபிஐ விசாரணை, அமைச்சர் மேல் விசாரணை என இந்த ஆட்சி ஒரு மானம் போயிருக்கும் ஆட்சி என்றார்.