‘என் மீது 40 திருட்டு வழக்குகள் இருக்கு…இனிமே என் மனைவிக்காக திருந்தி வாழப்போகிறேன்’ : மனைவியுடன் கமிஷனரிடம் மனு!

 

‘என் மீது 40 திருட்டு வழக்குகள் இருக்கு…இனிமே என் மனைவிக்காக திருந்தி வாழப்போகிறேன்’ : மனைவியுடன் கமிஷனரிடம் மனு!

என் மீது 40 வழக்குகள் உள்ளன. பாதி நான் சம்மந்தப்பட்டது, மீது போலீசாரால் ஜோடிக்கப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். 30 வயதான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று தனது மனைவி கலாவுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குக் கமலக்கண்ணன் வந்தார். 

ttn

அப்போது திருட்டு தொழிலை விட்டுவிட்டதாகவும், இனிமேல் திருந்தி வாழப் போகிறேன் என்றுகூறி மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நான் திருவண்ணாமலையைச் சேர்ந்தவன். முதன்முதலாகச் சென்னைக்கு வந்து ஒரு மேஸ்திரியிடம் வேலைப்பார்த்தேன். அவரை அடித்ததாக என் மீது முதன் முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் திருட்டு தொழில் செய்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ஒரு ரூமில் தங்கினேன்.அப்போது அவரை கைது செய்ய வந்த போலீசார் என்னையும் பிடித்து சென்றனர். செய்யாத தப்புக்கு போலீஸ் பிடித்ததால், வெளியில் வந்து  நானும் திருட தொடங்கினேன். பூட்டிய வீடுகளில் திருடுவேன். என் மீது 40 வழக்குகள் உள்ளன. பாதி நான் சம்மந்தப்பட்டது, மீது போலீசாரால் ஜோடிக்கப்பட்டது. திருட்டு தொழிலில் சம்பாதித்த நகைகள் எல்லாம் போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்’ என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், ‘எனக்கு 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. என் மனைவிக்காக நான் திருட்டு தொழிலை விட்டுவிட்டேன். என் மீது புதிய வழக்குகளைப் போட கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். புதிய வாழ்க்கையைத்  தொடங்கவுள்ளேன்’ என்றார்.