என் மீது போடப்படும் வழக்குகள் எனக்கு நெஞ்சில் குத்தப்படும் பதக்கம் போன்றது! – ராகுல் காந்தி 

என் மீது போடப்படும் வழக்குகள் எனக்கு நெஞ்சில் குத்தப்படும் பதக்கம் போன்றது! – ராகுல் காந்தி 

என் மீது போடப்படும் வழக்குகள் என் நெஞ்சில் குத்தப்படும் பதக்கத்தைப் போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கேரள மாநிலம் வானியம்பலத்தில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கட்சி மாநாடு நடந்தது. அதில் வயநாடு தொகுதி எம்.பி-யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

rahul gandhi

அப்போது, “என் மீது 15, 16 வழக்குகள் உள்ளன. நாம் ராணுவ வீரர்களைப் பார்க்கும்போது அவர்கள் மார்பில் பதக்கங்கள் பல தொங்குவதைக் காணலாம். அதைப் போல ஒவ்வொரு வழக்கும் எனக்கு கிடைத்த பதக்கங்கள். எவ்வளவு வழக்குகள் என் மீத தொடருகிறார்களோ அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியடைவேன். 
நம்முடைய நாட்டின் பலமே பெண்களுக்கு அளிக்கும் மரியாதை, பலவித மதங்கள், இனங்கள், சிந்தனைகள்தான். சித்தாந்த ரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். வெறுப்பு நிறைந்த இந்தியாவை நான் நம்பவில்லை. இந்தியாவில் அதுபோன்ற சூழல் இல்லை என்று என்னை நம்ப வைக்க பா.ஜ.க பல முறை முயன்றது. ஆனால் நான் பா.ஜ.க-வின் பேச்சை நம்பவில்லை.
எனவே அவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் அன்பு மொழியிலேயே பேசுகிறேன். நீங்களும் என்னுடன் இணைந்து நிற்கின்றீர்கள் என்பதை நான் ஒரு நாளும் மறக்கவில்லை.
கடந்த ஆண்டு மிகமோசமான இயற்கை சீற்றத்தால் கேரள மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்தீர்கள். பலத்த பொருட்சேதத்தைச் சந்தித்தீர்கள். இந்த மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் மறுகட்டமைப்பு செய்ய வெண்டி உள்ளது. மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து மாநில அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். மற்றவருக்கு கை நீட்டி உதவும் கலாச்சாரம் இங்கு உள்ளது” என்றார்.

rahul gandhi

சில நாட்களுக்கு முன்பு கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பா.ஜ.க எம்.பி சாத்வி பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை ராகுல்காந்தி முன்வைத்தார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வர வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.