என் மகள் காதலால் கெட்டுப்  போனவள்: நளினியின் தாய் கண்ணீர் பேட்டி!

 

என் மகள்  காதலால் கெட்டுப்  போனவள்: நளினியின் தாய் கண்ணீர் பேட்டி!

எனது மகள் நளினி 2 ஆயுள் தண்டனையைத் தாண்டிவிட்டார். எனவே, கருணையோடு இந்த அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  அவரது தாய்  பத்மா கோரிக்கை வைத்துள்ளார் .

வேலூர் : எனது மகள் நளினி 2 ஆயுள் தண்டனையைத் தாண்டிவிட்டார். எனவே, கருணையோடு இந்த அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  அவரது தாய்  பத்மா கோரிக்கை வைத்துள்ளார் .

nalini

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி  வேலூர் மத்திய சிறையிலிருந்து,  பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் மகள் திருமண ஏற்பாடுகளைக்  கவனித்து வந்த நிலையில்,  கடந்த 22ஆம் தேதி நளினிக்கு பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  மீண்டும்  இரண்டாவது முறையாக பரோலை நீட்டிக்க நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஏற்கெனவே 7 வாரங்கள் பரோல் அளித்திருந்த நிலையில்  மீண்டும் 4 வாரம் நீட்டிக்க முடியாது என்று  கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து பரோல் முடிந்த நிலையில் நேற்று நளினி மீண்டும்  வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

nalini mother

இதுகுறித்து நளினியின் தாய் கூறும் போது,  நான்  என் மகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டேன். 29 ஆண்டுகளாக மிகவும் ரணப்பட்டு இருக்கிறார்.  29 வருடமாக நிலாவையும் நட்சத்திரத்தைப் பார்க்கமுடியாத சூழலில் இருக்கிறாள்.அவளை இந்த  51 நாட்களில் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டேன்.அவளது மகளுக்கு லண்டனில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரால் வரமுடியவில்லை. எனது மகள் நளினி 2 ஆயுள் தண்டனையைத் தாண்டிவிட்டார். எனவே, கருணையோடு இந்த அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்.

என் மகள் அனுபவித்த கஷ்டம் போதும். அவள் விடுதலை ஆனாள் நல்லமுறையில் வாழ்வாள். அவள் தீவிரவாதத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவள் காதலால் கெட்டுப்  போனவள். என் பேத்தி திருமணத்திற்கு மீண்டும் நாங்கள் பரோல் கேட்போம்’ என்றார்.