என் தம்பியை எம்.பி., ஆக்குங்க… இல்ல உங்க சங்காத்தமே வேண்டாம்… சீறும் பிரேமலதா..!

 

என் தம்பியை எம்.பி., ஆக்குங்க… இல்ல உங்க சங்காத்தமே வேண்டாம்… சீறும் பிரேமலதா..!

ஏப்ரல் மாதம் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு எப்படியும் மூன்று சீட்டுகள் உறுதி. அதில் ஒன்றை பெற்று தம்பி எல்.கே.சுதீஷை டெல்லிக்கு அனுப்பியே தீரவேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறார்.

கூட்டணியில் இருந்தாலும் குனிய குனிய குட்டினால் பொறுக்க முடியாது என்று பேசி அதிமுக தரப்பை அதிர வைத்துள்ளார் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அவர் சொன்னதில் நியாயம் இருப்பதாகவே அங்கிருந்த  தொண்டர்கள் தலையாட்டியதை பார்க்க முடிந்தது. 

இதற்கான காரணம் உள்ளாட்சி தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடி. சீட் கொடுத்து தோற்கடித்ததாக குற்றச்சாட்டு. ‘ப’ விட்டமின் தராமல் கோயம்பேடு வேட்பாளர்களை கடைசி நேரத்தில்  தண்ணீர் காட்டியது என்று பட்டியல் நீள்கிறது. அத்துடன் நிற்கவில்லை. ஏப்ரல் மாதம் ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு எப்படியும் மூன்று சீட்டுகள் உறுதி. அதில் ஒன்றை பெற்று தம்பி எல்.கே.சுதீஷை டெல்லிக்கு அனுப்பியே தீரவேண்டும் என்ற  வேகத்தில் இருக்கிறார்.

vijayakanth

இந்த டீல் ஓகே என்றால் அடுத்த ஆண்டு நடக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமாம்.  இல்லாவிட்டால் அங்கிருந்து நடையை கட்ட தயாராக இருக்கிறது. கூட்டணியில்  இருந்தாலும் பாமகவுக்கு இருக்கிற  முக்கியத்துவம்  தேமுதிகவுக்கு இல்லையா..? அவர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும்தான் ஓட்டு வங்கி. நமக்கு தமிழகம் முழுவதும் கணிசமாக இருக்கு. இது தெரிந்தும் நம்மை அசிங்கப்படுத்துவதை  ஏற்க முடியாது. இனி பாஜக சொல்வதை எல்லாம் கேட்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது. நம் சுயகவுரவத்தை அடமானம் வைக்க முடியாது என்று தனது கட்சிக்காரர்களிடம் தன் ஆதங்கத்தை  அள்ளி கொட்டி வருகிறார் பிரேமலதா.