என்.டி.திவாரியின் மகன் மூச்சு திணறலால் உயிரிழந்தார்; பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்!

 

என்.டி.திவாரியின் மகன் மூச்சு திணறலால் உயிரிழந்தார்; பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்!

ரோஹித்தின் தாயான உஜ்வலை மகன் முன்னிலையில் இரண்டாவதாக திவாரி திருமணம் செய்து கொண்டார். அப்போது, திவாரியின் முதல் மனைவி உயிரிழந்திருந்தார். உஜ்வலின் கணவரும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்

புதுதில்லி: என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் மூச்சு சு திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைநிடாலை சேர்ந்தவர் என் டி திவாரி. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிந்த போதும், அங்கு போட்டியிட்டு முதல்வரானார். தன் பின்னர் மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளை வகித்து வந்த இவர், ஆந்திரா மாநில ஆளுநராக பதவி வகித்தார்.

nt tiwari

அப்போது, ரோஹித் சேகர் என்பவர் தனது தந்தை என்.டி.திவாரி என வழக்கு தொடர்ந்தார். இதனை முதலில் திட்டவட்டமாக மறுத்த திவாரி, டி.என்.ஏ சோதனைக்கு பின்னர், தனது மகன் தான் ரோஹித் என்பதை ஒப்புக் கொண்டு, இருவரும் சமாதானம் ஆகினர். ஆறு ஆண்டுகள் கடும் போராட்டத்துக்கு பின்னர், திவாரியை தனது தந்தை என ரோஹித் நிரூபித்தார்.

தொடர்ந்து, ரோஹித்தின் தாயான உஜ்வலை மகன் முன்னிலையில் இரண்டாவதாக திவாரி திருமணம் செய்து கொண்டார். அப்போது, திவாரியின் முதல் மனைவி உயிரிழந்திருந்தார். உஜ்வலின் கணவரும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி திவாரி மரணமடைந்து விட்டார்.

nt tiwari

இந்நிலையில், ரோஹித் திடீரென நேற்று மாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 40. இதுகுறித்து இயற்கைக்கு புறம்பான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உஜ்வல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் மூச்சு சு திணறல் காரணமாக உயிரிழந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையணையால் அமுக்கி மூச்சை நிறுத்தி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகபப்டுவதால், தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னதே சசிகலாதானாம்…இதெப்படி இருக்கு?