என் செருப்பை காணோம்… சென்னைப் போலீசுக்கு வந்த சோதனை!?

என் செருப்பை காணோம்… சென்னைப் போலீசுக்கு வந்த சோதனை!?

இந்தியாவுலயே,ஏன் இந்த உலகத்திலேயே லண்டன்ல இருக்கற ஸ்காலாண்ட் யார்டுக்கு அப்புறம் பெஸ்ட் போலீஸ் நம்ம தமிழ்நாடு போலீஸ்தான்னு ரொம்ப நாளா பெருமை அடிச்சுக்கிட்டு இருக்காங்க.அதுக்கு இப்ப , இப்படி ஒரு சோதனை வந்து இருக்கிது!

என்னோட 19 ஜோடி செருப்புகள எவனோ திருடிக்கிட்டுப் போயிட்டான், கண்டுபிடிச்சுக் குடுங்கன்னு செகரட்டேரியட் காலணி போலீஸ் ஸ்டேஷக்கு கம்ளைண்டு வந்திருக்காம்.குடுத்தது சாதாரண ஆள் இல்ல ஒரு பேங்க் மேனேஜர்!

police

சென்னை கீழ்பாக்கத்துல இருக்கற தலைமை செயலக காலணி திவான்பகதூர் சாலைல இருக்குது அப்துல் ரஃபீக் வீடு.ரஃபீக் நுங்கம்பாக்கத்துல இருக்கற ஒரு தனியார் வங்கில மேலாளரா வேல பாக்கறாரு.போன 15ம் தேதி காலைல வீட்டைப் பூட்டீட்டு வேலைக்குப் போயிட்டாரு ரஃபீக்.சாயந்திரம் வந்து பாத்தா,வீட்டு வாசல்ல வச்சிருந்த செருப்பு ஸ்டேண்ட் மட்டும் காலியா நிக்கிது,அதுல இருந்தத எல்லாம் யாரோ அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.
மொத்தம் 12 ஜோடி ஷூக்களும்,7 ஜோடி செருப்புகளும் இருந்துச்சாம் ஒன்னக்கூட விட்டு வைக்கல.

ரஃபீக் நேரா தலைமைச்செயலக காலணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னோட 19 ஜோடி காலணிகளக் காணோம்,அதுங்களோட மதிப்பு,80 ஆயிரம்.கண்டுபிடிச்சு குடுங்கன்னு புகார் கொடுத்து இருக்காராம்.
பாவந்தான் போலீஸ் , செருப்பைத் திருடுன அந்த மானங்கெட்ட மர்ம நபரை வலைவீசி தேடறாங்களாம்.

chappal

கெடச்சுட்டா சந்தோசம்,இல்லன்னா,ஏன் எங்க பேரக் கெடுக்கறீங்கன்னு அந்த ஸ்காட்லாண்ட்.யார்டே கேஸ்போடலாம்,அய்யா கமிஷ்னரே விட்டுடாதீங்க, ரொம்ப சீப்பா நினச்சுடும் இந்த உலகம்.