‘என் அப்பா, அம்மாவை அசிங்கமாக திட்டுகிறார்கள்…’ராகவா லாரன்ஸ் வேதனை பதிவு!

 

‘என் அப்பா, அம்மாவை அசிங்கமாக திட்டுகிறார்கள்…’ராகவா லாரன்ஸ் வேதனை பதிவு!

இந்த பதிவுக்கு ஆதரவாக சிலர், ‘நண்பா அவர்களின் விமர்சனங்களைக் காதில் போட்டு  கொள்ளாதீர்கள். உங்கள் பணி  தொடரட்டும்’ என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.  

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் ஆடியோ விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ரசிகன். அவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும்போதும் சண்டை போட்டிருக்கிறேன்.

ttn

இங்கு சொல்வதில் தப்பில்லை. கமல் சார் பட போஸ்டர் ஒட்டினால் கூட அதில் போய் சாணி அடிப்பேன். அப்போது என் மனநிலை மை அப்படி இருந்தது என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூகவலைதளங்களில் லாரன்ஸை வறுத்தெடுத்தார்கள்.

ttn

இதையடுத்து ராகவா லாரன்ஸ் கமல் ஹாசனை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்தார்.அதேபோல் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியதால் சீமான் ஆதரவாளர்களும்  லாரன்ஸுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில்  லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 
‘நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்!
இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள்,
இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்!
மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!
நான் ஒரு தனி மனிதன்!
எனக்கென்று தனிக் கூட்டமில்லை!
நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று…..
*”அன்புதான் தமிழ்”*
என்கிற,
அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும்,
தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும்,
உலகறிய செய்வதே அதன் நோக்கம்!
“இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!”
என்பது திருக்குறள் அதை பின்பற்றியே…
“எதிரிக்கும் உதவி செய்!
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை!
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு!
உள்ளத்தால் ஒன்றே!
கடவுளை வெளியே தேடாதே!
உனக்குள் இருக்கிறார்!
எனக்கு இது போதும் என்று நினை!
ஆசையை விடு!
அள்ளிக்கொடு!
ஆண்டவன் உன் பக்கம்!”

அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்….
தர்மம் இருப்பது உண்மையானால்…
என்வழி உண்மையானால்…
நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு
இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்!

இறுதியாக ஒன்று….
“என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும்,
அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,
நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்…!’ என்று உருக்கமாகப்  பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவுக்கு ஆதரவாக சிலர், ‘நண்பா அவர்களின் விமர்சனங்களைக் காதில் போட்டு  கொள்ளாதீர்கள். உங்கள் பணி  தொடரட்டும்’ என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.