என்ன நான் ஆந்திராவின் ஆளுநரா? சுஷ்மா சுவராஜ் விளக்கம்!

 

என்ன நான் ஆந்திராவின் ஆளுநரா?  சுஷ்மா சுவராஜ் விளக்கம்!

ஆந்திர மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

புதுடெல்லி:  ஆந்திர மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

modi

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. மோடி  தலைமையிலான அரசில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும் கடந்த முறை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த  சுஷ்மா சுவராஜுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. உடல்நலக்குறைவால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சுஷ்மா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

 இந்நிலையில் ஆந்திராவின் ஆளுநராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி ஏற்க இருப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக நரசிம்மன் இருந்து வருகிறார். அவருக்குப் பதிலாக, சுஷ்மா நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

இதையடுத்து இந்த தகவலை  சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.  இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி தவறானது’ என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சுஸ்மா சுவராஜுக்கு வாழ்த்து என்று பதிவிட்டு பின்  ட்வீட்டை நீக்கியது குறிப்பிடத்தக்கது.