என்ன தைரியம்…. பூட்டிய கடையைத் திறந்து மது விற்பனை செய்த மேலாளர்!!

 

என்ன தைரியம்…. பூட்டிய கடையைத் திறந்து மது விற்பனை செய்த மேலாளர்!!

ஊரடங்கு உத்தரவை மீறி திண்டுக்கல் அருகே பூட்டிய கடையை திறந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ஊரடங்கு உத்தரவை மீறி திண்டுக்கல் அருகே பூட்டிய கடையை திறந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்குதான் ஊரடங்கு என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார்.அதன்பின் மே.3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயினர். மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கிவிட்டது. அதனால், ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் எதிர்கொள்ள டாஸ்மாக் சரக்கு வாங்க முடியாமல் போயினர் தமிழக குடிமக்கள். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் திறக்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

tasmac

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லபட்டியில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை, ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.  கடையிலிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து, பூட்டப்பட்டு, அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், அந்தக்கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பாலகுரு, தனது வீட்டில் பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலகுரு வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பாலகுருவை தேடி வருகின்றனர்.