என்ன சோதனை இது..? மீனாட்சி அம்மன் கடைக்கண் பார்வை படுமா..?

 

என்ன சோதனை இது..? மீனாட்சி அம்மன் கடைக்கண் பார்வை படுமா..?

இப்படி பார்த்து பார்த்து துாய்மை பணி செய்கிற தக்காருக்கு விருது கிடைக்கவில்லையே என அவரது ஊழியர்கள் புலம்புகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் துாய்மை பணிக்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு விருதுகளை 2016-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவும், இந்த ஆண்டு மாநகராட்சி கமிஷனர் விசாகனும் வாங்கியிருக்கிறார்கள். meenakshi temple

கோவில் துாய்மை பணிக்காக தக்கார் கருமுத்து கண்ணன், எட்டு ஆண்டுகளாக 20 ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து சம்பளம்கொடுத்து வருகிறார். அதே போல் பொற்றாமரை குளத்தில் சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர்கள் மூலம் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைத்தார். இப்படி பார்த்து பார்த்து துாய்மை பணி செய்கிற தக்காருக்கு விருது கிடைக்கவில்லையே என அவரது ஊழியர்கள் புலம்புகிறார்கள்.  kannan

இந்த கருமுத்து கண்ணன் மதுரை தியாகராஜர் கல்லூரிகளின் உரிமையாளர். சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இத்தனை செய்தும் அவருக்கு மீனாட்சி அம்மனின் கடைக்கண் பார்வை படாமல் போய்விட்டதே…!