என்ன ஆனாலும் சரி, அந்த 15 லட்சத்தை வாங்காம விடப்போறதில்லை!

 

என்ன ஆனாலும் சரி, அந்த 15 லட்சத்தை வாங்காம விடப்போறதில்லை!

ஜூலை 31ஆம் தேதி தபால் நிலையத்திற்கு மேனேஜர் சரியான நேரத்திற்கு வரவில்லை. காரணம், தபால் நிலையத்திற்கு எதிரில் அவ்வளவு பெரிய வரிசை. குவிந்துகிடக்கிறது மக்கள் கூட்டம்.

கேரளா, மூணாறில் செயல்பட்டுவரும் தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க ஆள்பிடிக்கும் முகவர் ஒருவர் ஜூலை மாதத்திற்கான டார்கெட்டை முடிக்கவில்லை. ஜூலை மாத இறுதியில் மேனேஜர், இந்த முகவரை அழைத்து ”இந்த மாசம் டார்கெட்டை முடிக்கலேன்னா, அடுத்த மாசம் உனக்கு வேலை இல்லை, இன்னும் ரெண்டு நாளைக்குள்ள 20 பேரை அக்கவுண்ட் ஓப்பன் பண்ண வைக்கணும்” என கெடு விதிக்கிறார். ஜூலை மாதம் முடிய ரெண்டு நாள்தான் இருக்கு, 20 பேருக்கு எங்கே போறது என யோசித்தவருக்கு மூளையில் சி.எஃப்.எல். பல்ப் எரிகிறது.

People fall for hoax news

உடனடியாக வாட்சப்பை எடுக்கிறார். நாலே நாலு வரியில் நச்சுன்னு ஒரு செய்தி. ”ஜூலை 31ஆம் தேதிக்குள் மூணாறு தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்கினால், 15 லட்சம் வங்கி கணக்கில் மோடி அரசு செலுத்தும், இதை குறைந்தது 10 பேருக்காவதுஃபார்வேர்ட் செய்து ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றவும்”. ஒரே ஒரு குருப்பில் மட்டும் இதனை போஸ்ட் செய்கிறார். ஜூலை 31ஆம் தேதி தபால் நிலையத்திற்கு மேனேஜர் சரியான நேரத்திற்கு வரவில்லை. காரணம், தபால் நிலையத்திற்கு எதிரில் அவ்வளவு பெரிய வரிசை. குவிந்துகிடக்கிறது மக்கள் கூட்டம். 15 லட்சம் எல்லாம் கிடையாது என எவ்வளவு சொல்லியும் யாரும் நம்பவில்லை. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியே தீருவது என அடம்பிடித்திருக்கிறார்கள். மேனேஜர் அன்று வீடு திரும்பும்போது மணி இரவு 12. இரண்டாயிரம் புது அக்கவுண்ட். வாட் அ ஐடியா முகவர் ஜி!