என்னோட ட்விட்டர் ஐடி இதாங்க… நம்ம டச்சிலேயே இருப்போம்- காமெடி நடிகர் செந்தில்

 

என்னோட ட்விட்டர் ஐடி இதாங்க… நம்ம டச்சிலேயே இருப்போம்- காமெடி நடிகர் செந்தில்

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் கூட்டணியை  ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த கூட்டணியின் வெற்றியே செந்தில் கவுண்டமணியிடம் அடிவாங்க சம்மதம் தெரிவித்தது தான் என்று 
சினிமா விமர்சகர்கள்  ஜாலியாக கமெண்ட் அடிப்பதும் உண்டு.  காலப்போக்கில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த செந்தில் தற்போது சீரியல் என படுபிஸியாக உள்ளார். முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே நான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கு உள்ளே. @SENTHILOFFL அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!” என குறிப்பிட்டுள்ளார்.