என்னை அடிச்சுடாங்க சார்…. பா.ஜ. பெண் எம்.பி. மீது சபாநாயகரிடம் புகார் கொடுத்த காங்கிரஸ் எம்.பி…..

 

என்னை அடிச்சுடாங்க சார்…. பா.ஜ. பெண் எம்.பி. மீது சபாநாயகரிடம் புகார் கொடுத்த காங்கிரஸ் எம்.பி…..

மக்களவையில் பா.ஜ. பெண் எம்.பி. தன்னை தாக்கியதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் புகார் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளே நாடாளுமன்றம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் மோதலால் பரபரப்பாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே, வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக்கோரியும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

ஜாஸ்கவுர் மீனா

இதனையடுத்து ஆளும் கட்சி எம்.பி.களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.களுக்கும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் தன்னை பா.ஜ. பெண் எம்.பி. ஜாஸ்கவுர் மீனா தாக்கியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: மார்ச் 2ம் தேதி மதியம் 3 மணி அளவில் மக்களவை உள்ளே ஜாஸ்கவுர் மீனா என்னை உடல் ரீதியாக தாக்கினார். 

மக்களவை

நான் தலித் என்பதாலும், பெண் என்பதாலும் இது போன்ற சம்பவங்கள் தனக்கு தொடர்ந்து நிகழ்கிறது. பா.ஜ. எம்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் எஞ்சிய நாட்களில் அதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியவில்லை.