‘என்னிடம் பல ரகசியங்கள் இருக்கு…சொன்னால் எகிப்தின் நலனுக்கு நல்லதில்லை…’ சொல்லி முடிக்கும் முன்பே உயிரை விட்ட முன்னாள் அதிபர்

 

‘என்னிடம் பல ரகசியங்கள் இருக்கு…சொன்னால் எகிப்தின் நலனுக்கு நல்லதில்லை…’ சொல்லி முடிக்கும் முன்பே உயிரை விட்ட முன்னாள் அதிபர்

எகிப்து நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயக முறைப்படி 2012-ம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்  அதிபர் முகமது மோர்சி.

எகிப்து நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயக முறைப்படி 2012-ம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்  அதிபர் முகமது மோர்சி.ஆனால்,இவர் ஜனநாயக முறையில் ஆட்சி செய்யவில்லை என்று,ஆட்சிக்கு வந்த ஒரு வருஷத்திலே மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Mohammed Morsi

இதனால்,2013-ம் ஆண்டு ஜூலை மாதம்,அந்நாட்டு ராணுவம் முகமது மோர்சியை  வலுக்கட்டாயமாக அதிபர் பதவியிலிருந்து  நீக்கியது.தவிர,அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களைக்  கொன்ற குற்றத்திற்காக 67 வயது முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. 
நம்ம ஊர் அரசியல்வாதிகள் சொல்வது போல் ‘தன்னிடம் பல ரகசியங்கள் இருக்கின்றன… அதெல்லாம் வெளியில் நான் சொன்னால் எகிப்தோட நலனுக்கு பாதிப்பு ஏற்படும்! என்னை ஒதுக்கியிருந்தாலும் இந்த நாட்டையும்,மக்களையும் நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்’ என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாராம்!

Mohammed Morsi

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக  நீதி மன்றத்தில் ஆஜரான முகமது மோர்சி,எப்போதும் சொல்கிற மேற்கண்ட ஸ்டேட்மெண்டை நீதி மன்றத்திலும் உணர்ச்சி பொங்க சொல்லிக்கொண்டிருக்கும் போதே மயங்கி சரிந்திருக்கிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.