என்னப்பா டிரம்ப், எங்கள நேத்துதான கழுவி ஊத்துன! இன்னிக்கு டகார்ன்னு பல்டி அடிச்சுட்டியே!

 

என்னப்பா டிரம்ப், எங்கள நேத்துதான கழுவி ஊத்துன! இன்னிக்கு டகார்ன்னு பல்டி அடிச்சுட்டியே!

இந்தியா அதிக வரி விதிப்பதாக நேற்று குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று இந்தியா நல்லதை செய்கிறது என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா அங்கிருந்து இறக்குமதியாகும் பாதாம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. இது அண்மையில் நடைமுறைக்கு வந்தது. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, ஆனால் தனக்கு வந்தா ரத்தம் என்ற கதையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்புக்கு குதி குதின்னு குதித்தார்.

 மோடி-டிரம்ப் சந்திப்பு

வரி விவகாரம் ஜி20 உச்சிமாநாட்டின் போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உள்பட முக்கிய உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எதிர்பார்த்தது மாதிரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று டிவிட்டரில், பல  ஆண்டுகளாக அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரி அதிகமாக உள்ளது. இந்நிலையில் மேலும் வரியை உயர்த்தி இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. எனவே அந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.

இறக்குமதி வரி

இந்நிலையில் இன்று அப்படியே மாற்றி பேசி உள்ளார். ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து பேசினர். இது குறித்து இந்திய வெளியுறவு துறை செயலர் விஜய் கோக்லே கூறுகையில், நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பெரிய வெற்றிக்கு நீங்ககள் தகுதியானவர் என மோடியிடம் டிரம்ப் பேசினார். மேலும், வர்த்தகம் தொடர்பாக பேசுகையில், இந்தியாவுடன் இணைந்து நல்லதை செய்வோம்.  இந்தியா நல்லதை செய்கிறது. ஒவ்வொரும் அமெரிக்க பொருளாதாரத்தில் பங்கேற்க வேண்டும் என டிரம்ப் பேசியதாக தெரிவித்தார்.

நேற்று இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி விட்டு இன்று இந்தியா நல்லதை செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மாற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.