“என்னப்பா இது! நாய் கடிச்சா நாம அத திருப்பி அடிக்க கூடாதாம் “-துரத்திய நாயை விரட்டிய வாட்ச்மேன் மீது வழக்கு…  

 

“என்னப்பா இது! நாய் கடிச்சா நாம அத திருப்பி அடிக்க கூடாதாம் “-துரத்திய நாயை விரட்டிய வாட்ச்மேன் மீது வழக்கு…  

மும்பையில்  ஜுஹுவில் உள்ள எஸ்.என்.டி.டி கல்லூரியின் வளாகத்திற்குள் ஒரு தெரு   நாய் நுழைந்து  அட்டகாசம் பண்ணியதால் அதை தாக்கிய ஒரு காவலாளி மீது  விலங்குக் கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியளித்தது.

ஜுஹூவில் உள்ள எஸ்.என்.டி.டி கல்லூரி வளாகத்திற்குள் நாயை குச்சியால் அடித்த ஒரு வாட்ச்மேன் மீது  ஐ.பி.சி பிரிவு 429 இன் கீழ்  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில்  ஜுஹுவில் உள்ள எஸ்.என்.டி.டி கல்லூரியின் வளாகத்திற்குள் ஒரு தெரு   நாய் நுழைந்து  அட்டகாசம் பண்ணியதால் அதை தாக்கிய ஒரு காவலாளி மீது  விலங்குக் கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியளித்தது.இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் கல்லூரி வளாகத்திற்கு  சென்றபோது, ​அந்த நாய் கடுமையான வலியால் துடிப்பதைக் கண்டனர்.அதனால் சாண்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் கல்லூரி  காவலர் பிரதாப் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

sndt collage mumbai

இது பற்றி கூறிய விலங்கு உரிமை ஆர்வலர் சவிதா மகாஜன்,போலா என்று அழைக்கப்படும் பாதிக்கப்பட்ட நாய்,தடுப்பூசி போடப்பட்ட  ஆரோக்கியமான நாய்  என்றும்,எஸ்.என்.டி.டி கல்லூரி வளாகத்திற்குள் அது தாக்கப்பட்டதாகவும்  கூறினார்.அதை பற்றி கல்லூரியின் சில மாணவர்கள் அவரை  அணுகி, பிப்ரவரி 4 ஆம் தேதி செக்யூரிட்டி  சிங்கால் மீது புகார் கூறியதாக கூறினார். 

mumbai sndt dog

இது பற்றி அவர்கள் விசாரித்தபோது  கல்லூரி நிர்வாகியின் மனைவியின் அறிவுறுத்தலின் பேரில்தான்  செக்யூரிட்டி  நாயை அடித்துள்ளார் என்பது தெரியவந்தது.மகாஜன் குற்றம் சாட்டப்பட்டவரை தொலைபேசியில் அழைத்து,விசாரித்தபோது செக்யூரிட்டி  நாயை  தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.பின்னர்,செக்யூரிட்டியின்  வாக்குமூலத்தை பதிவு செய்து அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.