என்னது மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் தாக்கு!

 

என்னது மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் தாக்கு!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக தொண்டர் ஒருவரால் கூட கூற முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

பொன்னமராவதி: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக தொண்டர் ஒருவரால் கூட கூற முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ‘ஸ்டாலின் உள்பட அதிமுக குறித்து தரம் தாழ்ந்து பேசுபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக தொண்டர் ஒருவரால் கூட கூற முடியாது ‘ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘எந்த நடிகராவது அல்லது இயக்குநராவது அவர்களது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் மகள் திருமணத்திற்கு தாலி வாங்கிக் கொடுத்துள்ளனரா? இல்லை அவர்களது பிள்ளைகளுக்கு 100 ரூபாய்க்கு கால்குலேட்டராவது வாங்கிக் கொடுத்துள்ளனரா என்று விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.