என்னது நான் கர்ப்பமா? சாரி எனக்கு 22 வயசு தான் ஆகுது: பிரபல நடிகை ஓபன் டாக்!?

 

என்னது நான் கர்ப்பமா? சாரி எனக்கு 22 வயசு தான் ஆகுது: பிரபல நடிகை ஓபன் டாக்!?

நடிகை அனு  சித்தாரா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவர் பதிலளித்துள்ளார்.

நடிகை அனு  சித்தாரா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவர் பதிலளித்துள்ளார்.

anu

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர் அனு  சித்தாரா. இவர் நடிகர் மம்முட்டியுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து விட்டார். திலீப்புக்கு ஜோடியாக சுபராத்திரி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கருணாகரன் நடிப்பில் வெளியான பொதுநலன் கருதி படத்தில் நடித்திருந்தார். அது தவிர  தற்போது சீமான்  மற்றும் ஆர்.கே. சுரேஷ் இருவரும் இணைந்து நடிக்கும்  ‘அமீரா’ திரைப்படத்தில்  அனு சித்தாரா இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறார்.

anu

இந்நிலையில் நடிகை அனு  சித்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் படங்களில் ஒப்பந்தமாவதைக் குறைத்துக் கொண்டார் என்று என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், ‘எனக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது. அதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை. இது வெறும் வதந்தி தான்’ என்று கூறியுள்ளார்.

anu

அனு  சித்தாரா தன்னுடைய 18 வயதிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.