என்னது..தாயம் விளையாடியதால் கொரோனா வந்துடுச்சா?..இது என்ன புது புரளியா இருக்கு!

 

என்னது..தாயம் விளையாடியதால் கொரோனா வந்துடுச்சா?..இது என்ன புது புரளியா இருக்கு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

ttn

இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் 6 ஆவது வார்டில் வசித்து வரும் நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். அவர் வீட்டில் தனியாக இருப்பது பிடிக்காமல், பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து தாயம் விளையாடியுள்ளார். கொரோனா தீவிரம் அறியாமல் அவர் செய்த இந்த செயலால், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் வந்துள்ளது. இதனையடுத்து அவருடன் விளையாடிய மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவரின் வீட்டை சுற்றி 5 கி.மீ தூரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.