‘என்னது..சாலையில் தண்ணீர் தெளித்தால் ரத்தம் வெளியேறுகிறதா?’ பீதியில் உறைந்திருக்கும் கிராம மக்கள்!

 

‘என்னது..சாலையில் தண்ணீர் தெளித்தால் ரத்தம் வெளியேறுகிறதா?’ பீதியில் உறைந்திருக்கும் கிராம மக்கள்!

கொரோனா பீதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்

கொரோனா பீதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா பயத்தில் மக்கள் இருந்து வரும் நிலையில், பெரியகுளம் அருகே தார்சாலையில் தண்ணீர் தெளித்தால் ரத்தம் போன்ற திரவம் வெளியேறுவது அப்பகுதி மக்களிடையே இன்னும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் 300கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வழக்கமாக காலையில் வாசலில் தண்ணீர் தெளிப்பதை போன்று தெளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தார்சாலையில் இருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், பதற்றத்தில் இருந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மக்கள் கூட்டத்தை கலைத்து தடவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த தார்சாலை புதியதாக போடப்பட்டதால், இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.