என்னது இளம் பெண்களின் கனவு நாயகனோட பிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?

 

என்னது இளம் பெண்களின் கனவு நாயகனோட  பிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?

நடிகர் விஜய் தேவரகொண்டா உடல் பிட்னெஸ் குறித்த சீக்ரெட் குறித்து கூறியுள்ளார். 

ஹைதராபாத்:  நடிகர் விஜய் தேவரகொண்டா தனது  உடல் பிட்னெஸ் குறித்த சீக்ரெட் குறித்து கூறியுள்ளார். 

vijay

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

vijay

தெலுங்கில் வெற்றியானதையடுத்து தமிழில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும் பெண் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இன்னும் மவுசு குறையாமலே உள்ளது. 

vijay

விஜய் தேவரைகொண்டாவை பொறுத்தவரையில், உடம்பை பிட்னெஸாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். எப்படி இப்படி உடலை பிட்னெஸாக வைத்துள்ளார் என்று அவரிடம் எழுப்பிய கேள்விக்கு அவரின் பதிலோ அவரை போலவே சுவாரஸ்யமாகவே உள்ளது. 

vijay

‘நான்  பொதுவாகவே ஆரோக்கியமான உணவுகளையே விரும்புவேன். அதிகமான காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்வேன். ஆனால் சர்க்கரையை எந்த விதத்திலும் சேர்த்து கொள்வதை விரும்புவதில்லை. அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமானதாக உள்ளது. ஆனால், எனக்கு இட்லி, தோசை, பர்கர் தான் பிடிக்கும். பிட்டாக இருக்க உணவு மட்டும் போதாது. அதனால் கைப்பந்து, பேட்மின்டன் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜய் தேவரகொண்டா, நடிகை  ராஷ்மிகாவுடன் இணைந்து   டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா