என்னடா பண்ணி வச்சிருக்கீங்க நிர்மலா தேவியை?

 

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க நிர்மலா தேவியை?

இப்போ புது ரூட்டு கண்டுபிடிச்சு இருக்காய்ங்க. அதாவது, யார் பிரச்னை பண்றாங்களோ அவுங்களை ஒண்ணு ஜெயிலுக்கு அழைச்சிட்டுப் போறது இல்லேன்னா கண்காணாத இடத்துக்கு அழைச்சிகிட்டு போய் மாசகணக்கா வச்சிருந்து மென்ட்டல் டார்ச்சர் குடுத்து மனநிலை தவற வைக்கிறதுன்னு புதுசா யோச்சிச்சு இருக்காய்ங்க.

பொது மக்களுக்கு உண்மையான குற்றவாளியை தெரிவிக்க முடியாம இருக்கிறப்போ அல்லது நிஜமான குற்றவாளி சிக்காம இருக்கிறப்போ, யாராவது அப்பாவி சிக்குனா ஜெயிலுக்கு அழைச்சிட்டுப் போய் வாய்ல கரண்ட் கம்பிய குடுத்துத்தானே சோலிய முடிக்கும் நம்ம மேலிடம்? இப்போ புது ரூட்டு கண்டுபிடிச்சு இருக்காய்ங்க. அதாவது, யார் பிரச்னை பண்றாங்களோ அவுங்களை ஒண்ணு ஜெயிலுக்கு அழைச்சிட்டுப் போறது இல்லேன்னா கண்காணாத இடத்துக்கு அழைச்சிகிட்டு போய் மாசகணக்கா வச்சிருந்து மென்ட்டல் டார்ச்சர் குடுத்து மனநிலை தவற வைக்கிறதுன்னு புதுசா யோச்சிச்சு இருக்காய்ங்க. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா போராடுன முகிலன் நிலைமைதான் அப்படீன்னா, தமிழகத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருத்தர் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கில் ஒன்றரை வருஷம் ஜெயில்ல இருந்து வெளியே வந்திருக்கிற பேராசிரியர் நிர்மலா தேவியும் ஒரு மாதிரி ஆகியிருக்காங்க.

Nirmala Devi

ஜாமீனில் வெளிவந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரான நிர்மலா தேவியின் நடவடிக்கையில் திடீர் மாற்றம். வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, “நான்தான் காமாட்சி அம்மன் பேசறேன். காமாட்சியின் அருள் எனக்கு கிடைச்சாச்சு. என் குழந்தைங்க எல்லாம் செத்து போச்சு. எனக்காக சாட்சி சொன்ன மாணவிகள் எல்லாருமே தூக்கு போட்டுட்டு போய்ட்டாங்க.. எனக்கு காலைல 10 மணிக்கே விடுதலை கிடைச்சிடுச்சு. எல்லோரும் பட்டாசு வெடிச்சு கொண்டாடுங்க” என்று அவர் இஷ்டத்துக்கு பேசிகொண்டிருந்தார். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதை நீதிபதி தெரிவித்ததும், வாசல்படியில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு, “நான் பாவா வந்தால்தான் வருவேன்” என்று சொல்லி கொண்டே இருந்தார். இதையடுத்து, அங்கிருந்தோர் காருக்குள் இழுத்துச்சென்று உட்காரவைத்து அவரை அனுப்பி வைத்தனர். போன பாதை தவறா இருந்தாலும், தெளிவா கம்பீரமா இருந்த நிர்மலா தேவியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?