என்னடா நடக்குது இங்க? டிக் டோக்கில் வாண்டுகள் தலைமையில் லுங்கியுடன் பெண்ணுக்கு தாலிகட்டிய வாலிபர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

 

என்னடா நடக்குது இங்க? டிக் டோக்கில் வாண்டுகள் தலைமையில்  லுங்கியுடன் பெண்ணுக்கு தாலிகட்டிய வாலிபர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

 உங்களையெல்லாம் சந்திக்காமல் எப்படி இருக்க போறேன்னு தெரியலையே என்று ஒப்பாரி வைக்கும் அளவுக்கு  கடுப்பேத்துகிறார்கள்

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆப் டிக் டோக் . இதை தெரியாதவரே இருக்க முடியாது. ஆண், பெண், வயதானவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி   பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் டிக் டோக்  இல்லாமல்,  உங்களையெல்லாம் சந்திக்காமல் எப்படி இருக்க போறேன்னு தெரியலையே என்று ஒப்பாரி வைக்கும் அளவுக்கு  கடுப்பேத்துகிறார்கள் சில குடும்ப பெண்கள்.

tik tok

இந்நிலையில் டிக் டோக்கில் காதலை பரிமாறிக்கொள்வது, தாலி காட்டிக்கொள்வது போன்ற உச்சக்கட்ட கொடுமைகளும் நடக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு  தாலிகட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோயில் கொடிமரத்தின் அடியில். சில இளசுகள் மத்தியில் கைலி கட்டிக்கொண்டு தாலி கட்டுகிறார்  அந்த இளைஞர். இதையடுத்து இரண்டு மாலைகள்  கொண்டுவரப்பட அதை மாற்றிக்கொண்டு கைதட்டி விசில் அடித்தபடி முடிகிறது இந்த வீடியோ. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்ட நெட்டிசன்கள், டிக் டாக் முடிஞ்சு தாலிய  கழட்டி வீசிட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போயிருங்க , யாரும் உணர்ச்சி வசபடாதிங்க என்றும் ஆடம்பரமா கட்டிக்குடுத்தும் கருமம் புடிச்சதுங்க டைவோர்ஸ் வாங்கிட்டு வந்து நிக்குதுங்க அதுங்களுக்கு இதுங்க பருவால்ல போல என்றும் கலவையான விமர்சனங்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.