‘என்கவுண்டரை வரவேற்கிறோம்…ஆனாலும்?’ கொல்லப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களின் மனநிலை!

 

‘என்கவுண்டரை வரவேற்கிறோம்…ஆனாலும்?’  கொல்லப்பட்ட குற்றவாளிகளின்  குடும்பங்களின்  மனநிலை!

பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தப்பியோட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பலவேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஷிவா மற்றும் நவீன் ஆகியோரின் குடும்பத்தினர், ‘எங்களுக்கு என்கவுண்டர் குறித்து தகவல் சொல்லவில்லை. டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டோம்.  இப்படி செய்தது சரிதான். ஆனால் ஏன் அனைத்து  பாலியல் வன்கொடுமைக்கும் இப்படி தண்டனை கொடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ttn

என்கவுன்ட்டரில் கொலைசெய்யப்பட்ட முகமது பாஷாவின்  தாய், என் மகன் செத்து விட்டான். ஏன்  இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. என் மகனை கொன்றது தவறு என்று கதறியுள்ளார். குற்றவாளி சின்ன கேசவலு தாயோ,  யார் தவறு செய்தாலும் தவறு தவறு தவறுதான். என் மகனை நீங்களே எரித்து விடுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.