“எனது ஹோம்வொர்க் நோட்டுகள் காணவில்லை” – பிரபல நடிகர் கிண்டல்

 

“எனது ஹோம்வொர்க் நோட்டுகள் காணவில்லை” – பிரபல நடிகர் கிண்டல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இதனை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

சென்னை: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இதனை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

“எனது ஸ்கூல்டேஸில்  என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட இப்படித்தான் காணாமல் போனது. எனது டீச்சரிடம் இந்தக் காரணத்தை கூறும்போது அவர் என்னை பிரம்பால் அடித்து முட்டிக்கால் போடவைப்பார். அது அந்தக்காலம்” என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

 

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த், ரஃபேல் ஆவணம் போலத்தான் தனது ஹோம்வொர்க் நோட்டுகளும் பள்ளியில் காணாமல் போனது என கிண்டலடித்துள்ளது, அவர் பாஜகவை விமர்சிப்பது தொடர் கதையாகி வருகிறது.