எனது கட்சியில் 65% இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கத் திட்டம் : ரஜினிகாந்த்

 

எனது கட்சியில் 65% இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ  சீட் வழங்கத் திட்டம் : ரஜினிகாந்த்

பல ஆண்டுகளாக ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று தீவிரமாக எதிர்பார்த்துக்  கொண்டிருக்கையில் கடந்த 5 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.

பல ஆண்டுகளாக ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று தீவிரமாக எதிர்பார்த்துக்  கொண்டிருக்கையில் கடந்த 5 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் ரஜினி. அதில் கட்சி அறிவிப்பு குறித்துத் தான் ஆலோசிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த கூட்டத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் பற்றிய பல வதந்திகள் பரவி வந்தன. அதையடுத்து இன்று ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். 

ttn

அப்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, நான் அரசியலில் வருவது பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தான் இந்த கூட்டத்தைக் கூட்டினேன் என அதனை பற்றி விவரித்தார். அதன் பின்னர், எனது கட்சியில் 60 முதல் 65 சதவீதம் இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தற்போது சட்டமன்றத்தில் வயதான நபர்களே இருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நல்ல இளைஞர்களை அவர்களது  வீட்டுக்கே சென்று அரசியலுக்கு அழைத்து வர இருக்கிறேன். மற்ற கட்சிகளில் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.