எனக்கே சீட் இல்லையா.. அழைப்பிதழை தூக்கி அடித்த கோகுல இந்திரா! தினகரன் கட்சியில் ஐக்கியம்?

 

எனக்கே சீட் இல்லையா.. அழைப்பிதழை தூக்கி அடித்த கோகுல இந்திரா! தினகரன் கட்சியில் ஐக்கியம்?

நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோகுல இந்திராவிற்கு இருக்கை ஒதுக்கப்படாத விவகாரம் அதிமுகவிற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோகுல இந்திராவிற்கு இருக்கை ஒதுக்கப்படாத விவகாரம் அதிமுகவிற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா மேடைக்கு வந்துள்ளார்.

ஆனால், அவரை அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், இது அரசு விழா, அமைச்சர்களுக்கு மட்டும் தான் மேடையில் இருக்கை என கூறியுள்ளனர். அதே நேரத்தில் மதுசூதனன், கே.பி.முனுசாமி போன்ற அமைச்சர் அல்லாதோருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை கோகுல இந்திரா கவனித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், “நான் கட்சியின் அமைப்புச் செயலாளர், முக்கியமான ஆள் எனக்கே இருக்கை இல்லையா?” என அதிகாரிகளிடம் கத்திவிட்டு விழா அழைப்பிதழை தூக்கி அடித்துவிட்டு வெளியேறியுள்ளார்.

mgrcentenary

மேலும், கோபத்துடன் வெளியேறிய கோகுல இந்திராவை அங்கிருந்த முக்கிய நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை கோகுல இந்திரா கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகி டிடிவி.தினகரன் அணியில் கோகுல இந்திரா இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.