எனக்கு வருஷத்துக்கு சம்பளமாக ரூ.15 கோடி போதும்…. தொடர்ந்து 11 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாத மெகா கோடீஸ்வரர்…

 

எனக்கு வருஷத்துக்கு சம்பளமாக ரூ.15 கோடி போதும்…. தொடர்ந்து 11 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாத மெகா கோடீஸ்வரர்…

தொடர்ந்து 11 ஆண்டுகளாக தனது ஆண்டு சம்பளத்தை ரூ.15 கோடி என்ற அளவிலேயே வைத்து இருக்கிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.

இந்தியாவின் மிகப் பெரிய வருவாய் கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் இவருதான். திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானி பெட்ரோல், தொலைத்தொடர்பு என பல துறைகளில் கொடி கட்டி பறக்கிறார். 

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் இவரும் அந்நிறுவனத்தில் சம்பளம்தான் வாங்குகிறார். தொடர்ந்து 11வது ஆண்டாக கடந்த 2018-19ம் நிதியாண்டிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி ஆண்டு சம்பளமாக ரூ.15 கோடி வாங்கி உள்ளார். 2008-09ம் நிதியாண்டுக்கு முன்பு வரை முகேஷ் அம்பானி ஆண்டு சம்பளமாக ரூ.24 கோடி பெற்று வந்தார்.

முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளத்தில் (ரூ.15 கோடி) ஊதியம், அலவன்ஸ், ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கும். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ முகேஷ் டி அம்பானியின் இழப்பீடு ரூ.15 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக இழப்பீடு அளவுகளில் நவீனமயமாக்கலின் எடுத்துக்காட்டாக அவர் உள்ளார் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வருவாய்

முகேஷ் அம்பானி தனது சம்பளத்துக்கு உச்ச வரம்பு வைத்துள்ள போதிலும், அந்நிறுவனத்தின் முழுநேர இயக்குனர்கள் நிகில் மற்றும் ஹிடால் மெஸ்வானி உள்ளிட்டோரின் வருவாய் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.