எனக்கு தொற்று நோய் உள்ளது… பிரபல பாடகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 

எனக்கு தொற்று நோய் உள்ளது… பிரபல பாடகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனக்கு லைம் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனக்கு லைம் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
பாப் உலகில் பிரபலமான பாடகர் கனடாவின் ஜஸ்டின் பீபர். 25 வயதே ஆன ஜஸ்டின் பீபர் தன்னுடைய இஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குள்ள நீண்ட கால வைரல் நோய்த் தொற்று பற்றி வெளியிட்ட கருத்து அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

justin

ஜஸ்டின் பீபர் சில நாட்களாக போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்… இதனால் அவருடைய சருமத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று எல்லாம் ஜஸ்டின் பீபர் பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரவிவந்த நிலையில், தனக்கு நீண்ட காலமாக நோய்த் தொற்று இருப்பதாக ஜஸ்டின் பீபர் கூறியுள்ளார். 
ஜஸ்டின் தன்னுடைய பக்கத்தில், “பலரும் என்னைப் பற்றி விமர்சித்து வந்த நிலையில், எனக்கு உள்ள நோய் பற்றி யாரும் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு லைம் என்ற நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது என்னுடைய சருமத்தை மட்டும் பாதிக்கவில்லை என்றுடைய மூளை செயல் திறன், ஆற்றல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையுமே பாதித்துவிட்டது. சரியான சிகிச்சை எடுத்து வருகிறேன்… அது நோய்த் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும்.

நான் எப்படி லைம் நோய்க்கு எதிராக போராடினேன் மற்றும் அதில் இருந்து மீண்டேன் என்பதை விரைவில் யூடியூபில் வெளியாகும் என்னுடைய தொகுப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார். மேலும், நான் விரைவில் மீண்டு வருவேன்… எப்போதும் இல்லாத அளவுக்கு என்றும் கூறியுள்ளார். ஜஸ்டினின் மனைவி ஹெய்லி ரோட் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்த நோய் பற்றியும் தடுப்பு மருந்து பற்றியும் அறிவுலகம் நிறைய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

லைம் நோய் என்பது சிலந்தி கடிப்பதால் மனிதர்களுக்குப் பரவும் நோயாகும். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது இல்லை. இந்த தொற்று ஏற்பட்டால் சருமத்தில் சிவப்பு புள்ளிகள் ஏற்படும், சோர்வு, காய்ச்சல் போன்றவை ஏற்படும். மூன்று வாரங்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மருத்து எடுப்பது, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதன் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.