எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது ! வகுப்பறையில் சகமாணவனுக்கு குறி வைத்த மாணவி !

 

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது ! வகுப்பறையில் சகமாணவனுக்கு குறி வைத்த மாணவி !

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் காதலனை தீர்த்துக்கட்ட 2 கத்திகளுடன் மாணவி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மகாணத்தில் இருக்கிறது ஹில்டன் ஹெட் தீவு. இங்குள்ள பள்ளி ஒன்றில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவர் பையில் கத்தியுடன் வந்துள்ளார். இதை பார்த்து விட்ட சக மாணவி ஆசிரியரிடம் விஷயத்தை கூற பின்னர் அந்த பையை சோதனை செய்து 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகளை கைப்பற்றினர்.

இதுகுறித்து அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோது உடன் படிக்கும் மாணவனை காதலிப்பதாகவும் ஆனால் தன்னை விட்டு அவன் வேறு ஒரு மாணவியை விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து தனக்கு கிடைக்காத அவன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஆத்திரத்தில் அவனை பள்ளியிலேயே தீர்த்து கட்ட முடிவு செய்ததாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். இதை கேட்ட அந்த மாணவனும் பீதியில் உறைந்துள்ளார். மேலும் கடையில் சென்று கத்தி கேட்டால் சந்தேகம் அடைவார்கள் என்பதால் வீட்டில் காய்கறிகளை நறுக்க இருந்த கத்தியை பையில் எடுத்துப் போட்டு வந்துவிட்டதாகவும் கூறினார். இதை அடுத்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் உடமைகளை சோதனை செய்தபிறகு உள்ளே அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

americaschool

மேலைநாடுகளில் இருக்கும் கலாச்சாரத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றி வரும் நிலையில், பள்ளிக்கு கத்தி கொண்டு வரும் நம்மூர் கலாச்சாரத்தை யாரோ அந்த மாணவிக்கு தெரிவித்துள்ளார்கள். அந்த தமிழனுக்கு கண்டனத்தை தெரிவித்து விட்டு நாம் அடுத்த செய்திக்கு செல்வோம்.