“எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; ஏமாற்றம் தான்” : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

 

“எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; ஏமாற்றம் தான்” : நடிகர் ரஜினிகாந்த்  பரபரப்பு பேட்டி!

நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது. ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக நடந்த இந்த கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. 

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது . இதன் காரணமாக காலை முதலே ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது. ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக நடந்த இந்த கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. 

 


இந்நிலையில் கூட்டம் முடிந்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து பேசினேன். சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்திக்கும்படி இஸ்லாமிய அமைப்பிடம் கூறியுள்ளேன். அவர்கள் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உதவிகரமாக இருப்பேன்.

 

கட்சி தொடங்கும் விவகாரத்தில் நிர்வாகிகளுக்குப் பல விஷயங்களில்  திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய ரஜினியிடம், அரசியல் வெற்றிடத்தை நிரப்ப கமலுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நேரம் தான் பதில் சொல்லும் என்று கூறினார்.