எனக்கு… இல்லைனா என் பொண்டாட்டிக்கு… அதிமுகவில் மல்லுக்கட்டு..!

 

எனக்கு… இல்லைனா என் பொண்டாட்டிக்கு… அதிமுகவில் மல்லுக்கட்டு..!

இன்னும் பலர் மேயர் சீட்டுக்கு முட்டி மோதி வந்தாலும் பணம் அதிகமுள்ளோருக்கு தான் சீட். காரணம் நடக்கப்போவது மறைமுகத் தேர்தலாயிற்றே…

மதுரையில் 2014 – 19 வரை அ.தி.மு.க., – எம்.பி.,யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்.  2019 தேர்தலில், மதுரை லோக்சபா தொகுதியை கேட்டார். ஆனால், ராஜன் செல்லப்பா, முதல்வர் வரை போய் போராடி தன் மகனுக்கு சீட்டை வாங்கிவிட்டார். 

இதனால் வெறுத்து போன கோபாலகிருஷ்ணனை, பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தி கட்சியில் மாநில பொறுப்பு வாங்கி கொடுத்தார். கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே துணை மேயராக இருந்துள்ளார். அதனால், வரும் உள்ளாட்சி தேர்தலில் மதுரை மேயராக நினைக்கிறார். 

மாநகர செயலராக இருக்கிற கூட்டுறவு அமைச்சர் ராஜு மூலமாக பன்னீர்செல்வத்திடம் சீட் கேட்டிருக்கிறார். ஒருவேளை மதுரை மேயர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்கினால் தன் மனைவிக்கு தரணும் என கேட்டு இருக்கிறார். இன்னும் பலர் மேயர் சீட்டுக்கு முட்டி மோதி வந்தாலும் பணம் அதிகமுள்ளோருக்கு தான் சீட். காரணம் நடக்கப்போவது மறைமுகத் தேர்தலாயிற்றே…