எந்த ராசிக்கெல்லாம் செலவுகள் ஊதாரித்தனமாக இருக்கும்?

 

எந்த ராசிக்கெல்லாம் செலவுகள் ஊதாரித்தனமாக இருக்கும்?

உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும்.

11.11.2019 (திங்கட்கிழமை)
நல்ல நேரம் 
காலை 6.15 மணி முதல் 7.15 வரை
மாலை 3 மணி முதல் 4 வரை
ராகு காலம்
காலை 7.30 மணி முதல் 9 வரை
எமகண்டம்
காலை 10.30 மணி முதல்12 வரை
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை
பரிகாரம் – தயிர்
மேஷம் 
தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களைத் தரும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய நிறைய பிரச்சினைகள் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1
ரிஷபம் 
மன அமைதிக்காக சில நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்ளில் ஈடுபடுங்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள் தான் மையமானவராக இருப்பீர்கள். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம் 
உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது.
அதிர்ஷ்ட எண்: 8
கடகம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும். உங்களுக்காக செய்வதை விடவும் பிறருக்காக நிறைய செய்வதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
சிம்மம் 
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவுகள் மற்றும் செமினார்கள் வளர்ச்சிக்கு புதிய ஐடியாக்களைத் தரும். பயணம் பலன் தரும், 
அதிர்ஷ்ட எண்: 1
கன்னி 
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 8
துலாம் 
விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். வசிப்பிடத்தை மாற்றுவது நல்ல வளம் தரும். காதலின் வலியை உணர்வீர்கள். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
விருச்சிகம் 
உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். 
அதிர்ஷ்ட எண்: 3
தனுசு 
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் – நீங்கள் எதைச் செய்தாலும் வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுடைய பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9
மகரம் 
உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.  இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியுடன் இந்த நாள் தொடங்கும். 
அதிர்ஷ்ட எண்: 9
கும்பம் 
அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 7
மீனம் 
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5