எந்த ராசிக்கெல்லாம் செல்வ நிலை உயரும்!

 

எந்த ராசிக்கெல்லாம் செல்வ நிலை உயரும்!

வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். உங்கள் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமானவற்றை எளிமைப் படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றன.

ஜூலை 16, 2019 செவ்வாய்க்கிழமை

ராகுகாலம்
பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
நல்லநேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
சந்திராஷ்டமம்
ரோகிணி இரவு 9.48 மணி வரை பிறகு மிருகசீரிடம்
பரிகாரம் பால்

மேஷம் 
வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். உங்கள் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமானவற்றை எளிமைப் படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றன. ஆகையால், உங்களுக்கு இன்று தோல்வி என்பது அறவே இல்லை. வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். அதேசமயம், உங்கள் வேகத்தைக் குறைத்து, சில சாதக பாதக அம்சங்களை யோசியுங்கள். 

ரிஷபம்
பிற்பகலுக்கு மேல் உங்கள் கிரக நிலையின் மாற்றத்தால், சிந்தனை மாறும். இதனால், உங்களுக்கு பிடித்த நபர்கள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதனை சரி செய்ய முயற்சி செய்தும் தோல்வியைப் பரிசாய் பெறுவீர்கள். உங்களுக்கு இப்போது தனிமை என்பதை அனைவரும் உணருவார்கள்.  அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும். கோபத்தால் வீண் விவாதங்கள் ஏற்படும். 

மிதுனம் 
சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் சாதகமான நாள். நண்பர்களின் ஆலோசனைகளையும் கேட்பீர்கள், மூன்றாம் நபர்களின் ஆலோசனைகளையும் கேட்பீர்கள். அதில் தெளிவான விஷயங்களை ஏற்றுக் கொள்வீர்கள்.

கடகம் 
அதிகப்படியான பணியில் ஈடுபட கடுமையான உழைப்பீர்கள். அதனால் நன்மையும் உண்டு. சில சிக்கல்களும் உண்டு. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப வேலையைச் செய்யுங்கள் அதுவே போதும். நீங்கள் கை வைக்கும் காரியம் துலங்கும். வெற்றி உங்களுக்கே!.

சிம்மம்
உங்களது கிரக நிலைகள் உங்களது தன்னம்பிக்கையையும், விடா முயற்சிக்கான குணாதிசயத்தையும் வலிமையாக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற உங்களது எண்ணம் விரைவில் நிறைவேறும். உங்களுக்கான நேரம் இது. அதிர்ஷ்ட தேவதையை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி 
செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்களைக் கண்டு துவண்டுவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.  இப்போது உங்களுக்கு ஓய்வு அவசியம் என்பது உணருங்கள். தொடர் உழைப்பு உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோதிக்கும். 

துலாம் 
வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் உங்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மற்றவர்களின் ஆலோசனையை எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். உங்களைச் சுற்றி உள்ள பிரச்சனைகள் உங்களை விட மற்ற எவருக்கும் தெரியாது. இன்று சுமாரான நாளாக இருந்தாலும், உங்களுடைய அறிவாற்றலால் உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். 

விருச்சிகம்
கிரக நிலைகள் வாழ்க்கையின் போக்கை உங்களுக்கு இந்நேரம் புரிய வைத்திருக்கும். எப்படிப்பட்ட சவாலான சூழ்நிலைகளையும்  நீங்கள் கையாளும் விதமே, உங்களது திறமையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். மற்றவர்களால் உங்களுக்கு பெரிய வெற்றிகள் இருக்காது. உங்களது வெற்றியை நீங்களே உருவாக்குவீர்கள். 

தனுசு 
உங்களுடைய எதிர்பார்ப்புகள் தான் உங்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. பெண்ணால் பெயர் கெடும் சூழல் அமையும். எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்கள் ராசிக்கு, மன சஞ்சலத்தால் பெயர் கெடும் அபாயம் உண்டு. 

மகரம் 
செய்யும் பணியை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். படிக்கும் மாணவர்கள், படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

கும்பம் 
கோபத்தைக் குறைத்து கொள்ளுங்கள். உங்களது கோபம் தான் பல பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. பணிகள் இறுக்கமாக காணப்படும். பணிச் சூழலைக் கையாள்வதை கடினமாகவும் சவாலாகவும் உணர்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம்.

மீனம்
உங்களுக்கு இன்றைய ராசிப்படி, நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். ஏதேனும் ஒரு சேமிப்பிற்கு இன்று பிள்ளையார் சுழி போட்டு துவங்குங்கள். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். செல்வ நிலை இன்று உங்களுக்கு உயரும்.