எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நல்ல காலம் பொறந்திருச்சு!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம்  நல்ல காலம் பொறந்திருச்சு!

இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். 

04.03.2020(புதன் கிழமை)
நல்லநேரம் 
காலை 9 மணி முதல் 10 வரை
பிற்பகல் 2 மணி முதல் 3 வரை
ராகுகாலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம் 
காலை 7.30 மணி முதல் 9 வரை
 

மேஷம் 
இன்று உங்கள் ராசிக்கு நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும். ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் 
உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் கவலை மற்றும் வருத்தத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 7

கடகம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல் நலம் நன்றாக இருக்கும். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும். எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் 
நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்களுடன் மன வருத்தம் கொண்டிருந்த ஒருவர், அதை தெளிவுபடுத்தி சரி செய்ய முயற்சி செய்வார். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான வார்த்தைகளைக் கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

கன்னி 
மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள். தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

துலாம் 
சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலையை தவறாதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் தான். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவதுடன், குழந்தைகளின் தேவைகளையும் கவனியுங்கள்.  மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 
பல் வலி அல்லது வயிற்று வலி உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உடனடி நிவாராணத்துக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. உங்கள் இலக்கை அடைவதால் உங்களின் உறுதியான நிலைப்பாட்டுக்கு பலன் கிடைக்கும். கனவுகள் நனவாகும். இது தலைக்கனமாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

தனுசு 
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

மகரம் 
உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் 
செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகி விடும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள். அது கடினமாகவும், ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6

மீனம் 
இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும். ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களை தரும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். 
அதிர்ஷ்ட எண்: 4