எந்த நேரத்தில் எப்படி தேநீர் குடிக்கலாம் … அட்டகாசமான ஐடியா!

எந்த நேரத்தில் எப்படி தேநீர் குடிக்கலாம் … அட்டகாசமான ஐடியா!

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக்கும் தேநீருக்கு நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். சிறிது நேரம் லேட்டானால் கூட நம்மால் வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. எல்லாக் காலங்களிலும் தேநீர் பிரியர்கள் உண்டு என்றாலும் அந்தந்த காலநிலைக்கு ஏற்றபடி தேநீர் தயாரித்து அருந்தினால் நம் உடலும், மனமும் இன்னும்  ஆரோக்கியமாக, உற்சாகமாக இருக்கும். தேநீர் பிரியர்களுக்காக இதோ…..

tea

குளிர்கால தேநீர்

சுக்கு         -25கிராம்
மிளகு        -25கிராம்
ஏலம்        -25கிராம்
சீரகம்    -25கிராம்
தனியா    -100க

tea

செய்முறை

சுக்கு, மிளகு, ஏலம், சீரகம்,தனியா இவைகளை லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 200மிலி தண்ணீரில் தேவையான தேயிலை பொடியை போட்டு கொதிக்கும் போது தேவையான அளவு பனைவெல்லம் போட்டு வடிகட்டி குடிக்கலாம். இதனால் சளி, மார்ச்சளி, உடல் வலி, தலைவலி, உடல் குத்தல், செரியாதன்மை போகும்.

tea

வெப்பகால தேநீர்

தனியா     -200கிராம்
சீரகம்    -25கிராம்
ஏலம்        -25கிராம்
நன்னாரி    -100கிராம்

செய்முறை

தனியா, சீரகம், ஏலம், நன்னாரி இவைகளை லேசாக வறுத்து அரைத்தோ அல்லது நசுக்கியோ வைத்துக் கொண்டு 200மிகி தண்ணீரில் தினமும் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்கும் போது தேவையான அளவு பனைவெல்லம் போட்டு வடிக்கட்டி குடிக்கவும். இதனால் உடல் வறட்சி, நீர்வேட்கை , உடல் சூடு தணியும்.