எந்த நிதியாக இருந்தால் என்ன… கரூருக்கு வென்டிலேட்டர் தேவை! – எடப்பாடிக்கு ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

எந்த நிதியாக இருந்தால் என்ன… கரூருக்கு வென்டிலேட்டர் தேவை! – எடப்பாடிக்கு ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவனை வென்டிலேட்டர் கருவி வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கியிருந்தார். ஆனால், இதை ஏற்க முடியாது என்று கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குத்தான் தொகுதி நிதியை பயன்படுத்த முடியும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கரூர் மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் தேவை… இதில் பிரச்னையை வளர்க்க விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவனை வென்டிலேட்டர் கருவி வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கியிருந்தார். ஆனால், இதை ஏற்க முடியாது என்று கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குத்தான் தொகுதி நிதியை பயன்படுத்த முடியும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

karur-medical-collge

இதற்கு மு..க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். நிதியை ஏற்றுக்கொண்டு பிறகு இரண்டு நாட்கள் வழித்து அதை மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களுக்கு தேவை என்பதால் முதலமைச்சர் தலையிட்டு நிதியை பெற்று வென்டிலேட்டர் கருவியை உடனடியாக கரூர் மருத்துவமனை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், தொகுதி நிதியை தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விதியை காரணம் காட்டி ஸ்டாலின் தவறாக கூறுகிறார் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை எல்லாம் மத்திய அரசு கொரோனாவுக்காக எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது, எம்.எல்.ஏ-க்கள் நிதியில் இருந்து ஒரு கோடியை எடுக்கப்போவதாக எடப்பாடி பழனிசாமியே அறிவித்திருந்தார், இந்த நிலையில் அரவக்குறிச்சியில் பெரிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் மக்கள் அனைவரும் கரூர் மருத்துவமனைக்குத்தான் சென்றாக வேண்டும்.

senthil-balaji

எனவே, இதில் விதிகளை எல்லாம் பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பலரும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விளக்கத்துக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி  ஒதுக்கிய நிதியை மார்ச் 28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்!
பிரச்னையை வளர்க்க விரும்பவில்லை. எந்த நிதியிலிருந்து என்பதைவிட கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம். முதலமைச்சர் உறுதி செய்க” என்று கூறியுள்ளார்.