எந்தவொரு நிகழ்வும் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் உண்மையை மறைக்க முடியாது- ராகுல் காந்தி

 

எந்தவொரு நிகழ்வும் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் உண்மையை மறைக்க முடியாது- ராகுல் காந்தி

எந்தவொரு நிகழ்வும் இந்தியாவில் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் உண்மையை மறைக்க முடியாது என நிறுவன வரி குறைப்பு நடவடிக்கையை ஹவுடி மோடி நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு மறைமுகமாக ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 25.12 சதவீதமாக (செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்பட) குறைத்தார். இந்த வரி குறைப்பால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் தொழில்துறையில் முதலீடும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் அதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என கணக்கில் மத்திய அரசு வரி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது.

நிறுவன வரி குறைப்பு

மத்திய அரசின் நிறுவன வரி குறைப்பை நடவடிக்கையை, அமெரிக்காவில் மோடி பங்கேற்க இருக்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சியுடன் மறைமுகமாக குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நிறுவன வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஹவுடி மோடி நிகழ்சிக்கான செலவு என்பது குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

ஹவுடி மோடி நிகழ்ச்சி விளம்பரம்

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டரில், பிரதமர் தனது ஹவுடி இந்திய பொருளாதார கூட்டத்துக்கு இடையே பங்குச் சந்தை உயர்வுக்கு என்ன செய்ய தயாராக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ரூ.1.4 லட்சம் கோடி ஹூஸ்டன் நிகழ்வு உலகிலேயே மிகவும் அதிக செலவிலான நிகழ்வு. எப்போதும்! ஆனால் எந்தவொரு நிகழ்வும் இந்தியாவில் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதை மறைத்து விட முடியாது. ஹவுடி மோடி இந்தியாவை உள்ளே தள்ளுகிறது என டிவிட் செய்து இருந்தார்.