எந்தக் கிழமைகளில்  யாரை வணங்கினால் பலன்கள் கிடைக்கும்?

 

எந்தக் கிழமைகளில்  யாரை வணங்கினால் பலன்கள் கிடைக்கும்?

நாம் அனைவருமே கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று பார்த்து தான் கோயிலுக்குச் செல்கிறோமா? எந்த நாள், எந்த கடவுளுக்கு உகந்தது என்று பார்த்து, அந்த நேரத்தில் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும். டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக எந்தெந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்கிற தகவலைக் கொடுத்திருக்கிறோம். 

நாம் அனைவருமே கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று பார்த்து தான் கோயிலுக்குச் செல்கிறோமா? எந்த நாள், எந்த கடவுளுக்கு உகந்தது என்று பார்த்து, அந்த நேரத்தில் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும். டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக எந்தெந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்கிற தகவலைக் கொடுத்திருக்கிறோம். 

suriyabhagavan

ஞாயிறு

சூரிய பகவானின் இன்னொரு பெயர் ஞாயிறு. ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாள். அதனால், கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்கி வழிபடுவதற்கு ஏதுவான நாள் ஞாயிறு. ஞாயிறு காலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி சூரிய பகவானை வழிபட்டு நலம் பெறலாம். ஞாயிற்றுக் கிழமைகளில்  பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறன்றும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று சூரியனை ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்லோகம் சொல்லி வணங்கி வாருங்கள்.

lord sivan

திங்கள்

திங்கட்கிழமைகளில் சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் திங்கட்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

lord murugan

செவ்வாய்

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த தினம். சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் செவ்வாய் கிழமைகளில் ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

lord perumal

புதன்

புதன் கிழமைகளில் பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசி மாடத்திற்கு புதன் கிழமைகளில் பூஜைகள் செய்து வரலாம். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.

thanchanamurthy

வியாழன்

நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். தென்முக கடவுளான தட்சணாமூர்த்தியை வியாழனன்று வணங்கலாம். கருணையே வடிவான சாய் பாபாவை நெக்குருவி வழிபடலாம். ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த கிழமை வியாழன்.  பகவத் கீதையை அதன் பொருள் உணர்ந்து வியாழன் அன்று படித்து வந்தால் நன்மை கிடைக்கும். 

mahalakshmi

வெள்ளி

வெள்ளிக்கிழமைகளில், மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்து விளக்கினை ஏற்றி வைத்து வழிபடுவது இதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வரலாம். மஹாலட்சுமி ஸ்தோத்ரம், மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

hanuman

சனி

ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலையை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள் சனிக்கிழமை. ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள்.

இவை தவிர, முழு முதற் கடவுளான விநாயகரை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம்.