எதுக்குத்தான் தள்ளுபடினு ஒரு கணக்கே இல்லையா?!

 

எதுக்குத்தான் தள்ளுபடினு ஒரு கணக்கே இல்லையா?!

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க ஐஸ்லாந்தில் இருந்து ஆர்டிக் வரை எங்கு பார்த்தாலும் தள்ளுபடிகளும்,ஃபெஸ்டிவல் ஆஃபர்களும் தாறுமாறாக அறிவிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன.ஆனால் அவை எல்லாம் செறுப்பு விற்பவர்களும்,செண்ட் விற்பவர்களும்,கேக் விற்பவர்களும், தருகிற டிஸ்கவுண்ட்கள்,அல்லது ஸ்பெஷல் ஆஃபர்கள்

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க ஐஸ்லாந்தில் இருந்து ஆர்டிக் வரை எங்கு பார்த்தாலும் தள்ளுபடிகளும்,ஃபெஸ்டிவல் ஆஃபர்களும் தாறுமாறாக அறிவிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன.ஆனால் அவை எல்லாம் செறுப்பு விற்பவர்களும்,செண்ட் விற்பவர்களும்,கேக் விற்பவர்களும், தருகிற டிஸ்கவுண்ட்கள்,அல்லது ஸ்பெஷல் ஆஃபர்கள்.

xmas

இப்போது உலக போலீஸில் முதல் முறையாக,சாரி இரண்டாவது முறையாக டிராஃபிக் ஃபைனுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. அதுவும் 50% தள்ளுபடியாம். மலேசிய நாட்டில் போக்குவரத்து விதியை மீறுபவர்களை சி.சி.டி.வி கேமாரா மூலம் கண்காணித்து வீட்டு முகவரிக்கே சம்மன் அனுப்பி விடுவார்கள். அப்படி சம்மன் அனுப்பியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டாதவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதால்தான் இந்த அறிவிப்பு.

poice

கோலாலம்பூர் போக்குவரத்து போலீசின் தலைவரான ஜூல்ஸ்ஃபிளை யாஹ்யா இதுபற்றி கூறும்போது,கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டாத்தின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 24 மற்றும் 26ம் தேதிகளில் காலை 8.30 முதல் மாலை 4 மணிக்குள் ஜலானில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையின் தலைமை அலுவலகத்துக்கு வந்து ஃபனைக் கட்டினால்,கட்டவேண்டிய அபராதத்தில் 50% தள்ளுபடி தரப்படும் என்று சொல்லி இருக்கிறார்.

police

ஆனால்,இதில் கைது செய்யப்பட வேண்டிய குற்றம் செய்தவர்களும்,ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடத்துபவர்களுக்கும் இந்த சலுகை இல்லை என்று சொல்லி இருக்கிறார்.கடந்த சீன புத்தாண்டின் போது இது போன்ற ஒரு அறிவிப்பை ஜுல்க்ஃபிளை யாஹ்யா அறிவித்தபோது 1600 பேர் தங்கள் அபராதத்தை செலுத்தினார்களாம்.இப்போது அதை விட கூடுதலான வருமானம் வரும் என்று மலேசிய போலீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது.