எதிர்ப்புகளின் எதிரொலி! இனி தமிழிலும் ரயில்வே தேர்வு!!

 

எதிர்ப்புகளின் எதிரொலி! இனி தமிழிலும் ரயில்வே தேர்வு!!

ரயில்வேயில் துறைசார்ந்த தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

ரயில்வேயில் துறைசார்ந்த தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

Railway exam

மத்திய ரயில்வே துறை பணியாளர்களுக்கான துறை ரீதியான எழுத்துத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் எழுதப்படுவதாகவும் அதில் தமிழை புறக்கணிப்பதாகவும், மாநில மொழிகளில் தேர்வு எழுத உத்தரவு கேட்கக் கூடாது என்ற  மத்திய ரயில்வே துறையின் முடிவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்த தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

statement

இந்நிலையில் ரயில்வேயில் துறைசார்ந்த  GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.