எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறிக்கும் ஆந்திர அரசியல் ! 6 எம்எல்ஏ-க்களால் சந்திரபாபுவுக்கு பின்னடைவு ?

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறிக்கும் ஆந்திர அரசியல் ! 6 எம்எல்ஏ-க்களால் சந்திரபாபுவுக்கு பின்னடைவு ?

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழக்க நேரிடும் என ஆந்திர மாநில சாலைகள் மற்றும் கட்டிட அமைச்சர் தர்மனா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார். குண்டூர்-மேற்கு பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மடாலி கிரிதாரா ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்ததை அடுத்து கிருஷ்ண தாஸ் இதனைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவியை இழந்துள்ள சந்திரபாபு நாயுடு விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழப்பார் என அமைச்சர் ஒருவர் பேசியது ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழக்க நேரிடும் என ஆந்திர மாநில சாலைகள் மற்றும் கட்டிட அமைச்சர் தர்மனா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார். குண்டூர்-மேற்கு பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ மடாலி கிரிதாரா ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்ததை அடுத்து கிருஷ்ண தாஸ் இதனைத் தெரிவித்தார். ஆந்திராவில் அரசியல் சூழ்நிலைகளை பார்க்கும்போது கிருஷ்ணா தாஸின் வார்த்தைகள் உண்மையாகும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி உண்மையில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போதும் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பொறுத்துதான் என்பது உறுதியாகி உள்ளது. ஒருவேளை அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டி பக்கம் சென்ற விட்டால் நிச்சமாயக சந்திரபாபுவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்கட்சித் தலைவர் என்றால் ஒரு அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, ஊதியம் மற்றும் சலுகைகள் கிடைக்கம். 2003 ல் மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை முயற்சியில் இருந்து தப்பித்தவர் சந்திரபாபு. இதனால் அவருக்கு தேசிய பாதுகாப்பு காவல் வழங்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை அவர் இழந்தார். அந்த பாதுகாப்பு அவர் இழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் மக்களவையில் முதல் சபாநாயகர் ஜி.வி.மவளங்கர், சபையின் உறுப்பினர்களில் குறைந்தது 10% பேர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும் என்று முடிவு செய்தார். அதன்படி பார்த்தால் ஆந்திர சட்டசபையில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க குறைந்தது 18 எம்.எல்.ஏ.க்கள் தேவை. கடந்த தேர்தலில் 175 கொண்ட சபையில் 23 இடங்களை மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியது.  23 எம்எல்ஏக்கள் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் சந்திரபாபு நாயுடு. ஆனால் 6 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுவிட்டால் அந்த அந்தஸ்தை இழப்பார்.