எதிர்க்கட்சிகளின் இன்னொரு கோரிக்கையையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்! நடத்துங்க ஆபிசர்

 

எதிர்க்கட்சிகளின் இன்னொரு கோரிக்கையையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்! நடத்துங்க ஆபிசர்

வாக்கு இயந்திரத்தில் கோளாறோ ஏற்பட்டிருந்தாலோ அல்லது தில்லுமுல்லு நடந்திருந்தாலோ, ஒப்புகைசீட்டு எண்ணிக்கை மாறுபடும். இதன்மூலம், தவறு நடந்திருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியும். எனவேதான், ஒப்புகைசீட்டு எண்ணிக்கையை முதலில் எண்ணவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பிருப்பதால், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையை முதலில் எண்ணி முடிக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் வழக்கம்போல் நிராகரித்துள்ளது. எல்லா வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ள ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையையும் எண்ணவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முன்னதாக தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஏற்க மறுத்திருந்தன.

Election Commissioners

எதிர்க்கட்சிகள் கேட்பதுதான் என்ன? வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையும் சரிசமமாக பொருந்திப்போகவேண்டும். வாக்கு இயந்திரத்தில் கோளாறோ ஏற்பட்டிருந்தாலோ அல்லது தில்லுமுல்லு நடந்திருந்தாலோ, ஒப்புகைசீட்டு எண்ணிக்கை மாறுபடும். இதன்மூலம், தவறு நடந்திருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியும். எனவேதான், ஒப்புகைசீட்டு எண்ணிக்கையை முதலில் எண்ணவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

VVPAT

இந்த விஷயத்தில் முடிவெடுக்க  ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். பின் அவர்களுக்குள் கூடிப்பேசினார்களோ இல்லை எங்கிருந்து அந்த உத்தரவு வந்ததோ, தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. எனக்கென்னவோ, அடுத்த முறை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துமா இல்லை வெற்றியாளர்களை அவர்களே அறிவித்துவிடுவார்களோ என்று சந்தேகம் வலுக்கிறது.