எடப்பாடி முன்னிலையில் அதிமுகவுக்கு பல்டி அடித்த ராதாரவி…நடிகர் சங்கத் தேர்தல் ரத்து?…

எடப்பாடி முன்னிலையில் அதிமுகவுக்கு பல்டி அடித்த ராதாரவி…நடிகர் சங்கத் தேர்தல் ரத்து?…

தனது ஒற்றைத் தலைமைக்கு வலு சேர்த்துவரும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில் ராதாரவியின் இந்த திடீர் முடிவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

radharavi

’கொலையுதிர் காலம்’ பட ஆடியோ வெளியீட்டுவிழா விழாவில் நடிகை நயன்தாரா குறித்து மிக மட்டமாகப் பேசிய காரணத்துக்காக, தேர்தல் நேரத்தில் திமுகவிலிருந்து நடிகர் ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதற்கு எவ்வித எதிர்கருத்தும் தெரிவிக்காத ராதாரவி தனக்கு தரப்பட்ட ஓய்வை மிகவும் விரும்புவதாக மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகத்தில் அக்கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்து வரும் நிலையில் நடிகர் ராதாரவி முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செய்தி புகைப்படத்துடன் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

radharavi

வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராதாரவி தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டிருப்பது நிச்சயமாக நடிகர் விஷாலுக்குப் பெரும்பின்னடைவுதான். விஷால் நடிகர் ராதாரவி மற்றும் சரத்குமார் மீது நிலமோசடி வழக்குத் தொடர்ந்துள்ளார். ராதாரவி இம்முறை பதிலுக்கு விஷால் மீது தேர்தல் அதிகாரியிடம் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி தேர்தலை நிறுத்தவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு விஷால் மீது ஏகப்பட்ட கடுப்பில் இருக்கும் நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் ரத்தானால் ஆச்சர்யப்படவேண்டியதில்லை.