எடப்பாடி மட்டும்தான் வெளிநாடு போவாரா…! இதோ ஒபிஎஸ்சும் கிளம்பிட்டார்…

எடப்பாடி மட்டும்தான் வெளிநாடு போவாரா…! இதோ ஒபிஎஸ்சும் கிளம்பிட்டார்…

தமிழக முதல்வரைத்  தொடர்ந்து துணை முதல்வர் ஒ.பி.எஸ் வெளிநாட்டு பயணம் செல்லப்  போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வரைத்  தொடர்ந்து துணை முதல்வர் ஒ.பி.எஸ் வெளிநாட்டு பயணம் செல்லப்  போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

14 நாட்கள் அமெரிக்கா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துத்திட்டதாக அறிவித்தார் முதல்வர். அதன்படி சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

அதனையடுத்து, ஓ.பி.எஸ்சும் வெளிநாட்டுக்கு  சுற்று பயணம் செல்லப் போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து டைம்ஸ்  ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின் படி, தற்போது  துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சிங்கப்பூர், இந்தோனேஷியா அல்லது சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கட்டுமானம் தொடர்பான புதிய ஆய்வுகளை பார்வையிடுவார் என எதிர் பார்க்கப் படுகிறது.

மேலும், சுற்று பயணத்தின் தேதிகள் இன்னும் சரியாக தெரியாத நிலையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் செல்வார் என எதிர் பார்க்கப் படுகிறது.