எடப்பாடி ஆட்சியை தட்டிப்பறிப்பாரா மு.க.ஸ்டாலின்..? தமிழகத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன?

 

எடப்பாடி ஆட்சியை தட்டிப்பறிப்பாரா மு.க.ஸ்டாலின்..? தமிழகத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன?

திமுக கூட்டணி ஏற்கெனவே 98 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வசந்தகுமார் பதவி விலகினால் எண்ணிக்கை 97. தற்போது 13 தொகுதிகளில் வென்றுள்ளது ஆக மொத்தம் 110. இன்னும் ஆட்சி அமைக்க இன்னும் 7 உறுப்பினர்கள் தேவை.

தேர்தலுக்கு முன்பு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்திருக்கிறது தேர்தல் முடிவுகள்.

எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலைக்கப்பட்டு, தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.edappadi

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 351 இடங்களில் வென்றுள்ளது. அதில் பி.ஜே.பி மட்டும் தனித்தே 300 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. இதனால், மத்தியில் பி.ஜே.பி-யே ஆட்சி அமைக்கும். அதனால், அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அரசின் தலையில் தொங்கிய கத்தி நீங்கி உள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பலம் 113. சபாநாயகர் சேர்த்தால் 114. அதில் மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி தினகரனை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அவர்களைக் கழித்துவிட்டால், 110 பேர். இதில் இரட்டை இலையில் வெற்றி பெற்ற தமிமூன் அன்சாரி, தி.மு.கவை ஆதரிக்கிறார். அவரையும் கழித்துவிட்டால்கூட அ.தி.மு.க வசம் 109 எம்.எல்.ஏ-க்கள் உறுதியாக இருக்கின்றனர்.stalin

இந்நிலையில் தற்போது நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 9 இடங்களில் அதிமுக வென்றுள்ளது.  தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்த குமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி,யாக வெற்றி பெற்றுள்ளார். 

இதனால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அப்படியானால், தமிழக சட்டமன்றத்தின் இடங்கள் 233. அதில் 116 இடங்களைப் பெற்றாலே, அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. தற்போது அவர்கள் வசம், 109 இடங்கள் உள்ளன. தற்போது 9 இடங்களில் வென்றுள்ளதையும் சேர்த்தால் 118.  stalinஅ.தி.மு.க ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. திமுக கூட்டணி ஏற்கெனவே 98 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வசந்தகுமார் பதவி விலகினால் எண்ணிக்கை 97.  தற்போது 13 தொகுதிகளில் வென்றுள்ளது ஆக மொத்தம் 110. இன்னும் ஆட்சி அமைக்க இன்னும் 7 உறுப்பினர்கள் தேவை.  7 பேரை விலைக்கு வாங்கினால் திமுக ஆட்சியமைக்க முடியும். ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியமைக்க உள்ளதால் 2021 வரை அதிமுக ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.